செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் 'புலி' நடிகை

  • IndiaGlitz, [Friday,January 29 2016]

சிம்பு நடிப்பில் செல்வராகவன் இயக்கி வந்த 'கான்' படம் டிராப் ஆனதை அடுத்து செல்வராகவன் இயக்கவுள்ள புதிய படமான 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் நேற்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ரெஜினா நடிக்கவுள்ளனர். கவுதம் மேனன் தயாரிக்கும் இந்த படம் ஒரு திகில் படமாக உருவாகவுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யின் 'புலி' படத்தின் நாயகிகளில் ஒருவரான நந்திதா ஸ்வேதா தற்போது இணைந்துள்ளார். இவர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1963ஆம் ஆண்டு வெளிவந்த 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்கும் இந்த புதிய படத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும், அந்த படத்தின் ரீமேக் இல்லை என்றும், இந்த படம் புதிய கதையம்சம் கொண்ட திகில் படம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.