அரவிந்தசாமியுடன் முதல்முறையாக இணையும் நந்திதா

  • IndiaGlitz, [Wednesday,February 01 2017]

'தனி ஒருவன்' படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி ஆன அரவிந்தசாமி, ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைந்து நடித்த 'போகன்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

மேலும் அவர் நடிக்கவுள்ள 'சதுரங்க வேட்டை' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அரவிந்தசாமி நடிக்கவுள்ள மற்றொரு படத்தின் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ஏற்கனவே அரவிந்தசாமி நடித்த 'புதையல்' உள்பட ஒருசில படங்களை இயக்கிய செல்வா, தற்போது 'வணங்காமுடி' என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் நாயகனாக அரவிந்தசாமியும், அவருக்கு ஜோடியாக ரித்திகாசிங்கும் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தில் தற்போது நந்திதா முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். மேலும் 'தனி ஒருவன்' படத்தில் அரவிந்தசாமிக்கு தந்தையாக நடித்த தம்பிராமையாவும் இந்த படத்தில் இணைகிறார். மேலும் ஒரு பெண் கேரக்டர் உள்பட மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 14ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

ஜனவரியில் மிஸ் ஆன தல-தளபதி சந்திப்பு பிப்ரவரியில் நடக்குமா?

கடந்த மாதம் ஜல்லிக்கட்டுக்காக கோலிவுட் திரையுலகினர் நடத்திய மெளன உண்ணாவிரத போராட்டத்தின்போது அஜித், விஜய் சந்திப்பு நடக்கும் என்று எதிர்பர்க்கப்பட்டது. ஆனால் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத அஜித் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டாலும், விஜய் கலந்து கொள்ளாததால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை...

ஜல்லிகட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு,. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சி போராட்டம் காரணமாக தமிழக அரசு, மத்திய அரசின் வழிகாட்டுதலின்பேரில் கடந்த வாரம் அவசர சட்டம் இயற்றியது. இந்த அவசர சட்டம் சட்ட முன்வடிவாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதோடு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்...

டிரம்ப் அதிரடியால் கமல், விஜய், விக்ரம், தனுஷ் படங்களுக்கு பிரச்சனை?

அமெரிக்க அதிபராக கடந்த 20ஆம் தேதி பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் எப்போது என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை ஊகிக்க முடியாத அளவில் அவருடைய அறிவிப்புகள் அதிரடியாக உள்ளது...

இந்தியர்களின் அமெரிக்க கனவை தகர்த்த அதிபர் டிரம்ப்

இந்தியாவில் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொருவரின் கனவு அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆகவேண்டும் என்பதாகத்தான் இருக்கும். லட்சக்கணக்கில் சம்பளம், வசதியான வாழ்க்கை ஆகியவையே இதற்கு காரணம். இதனால்தான் தினந்தோறும் அமெரிக்க தூதரகங்கள் முன் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நிற்பதை பார்த்து வருகிறோம்....

அதிகாரிகள் முன் தாய்ப்பால் சுரந்து சோதனை. ஜெர்மனி விமான நிலையத்தில் இந்திய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் என்ற விமான நிலையத்தில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் அதிகாரிகள் முன் மார்பகத்தில் தாய்ப்பால் சுரந்து காண்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது...