நந்தினி எனக்கு ஒரு ஸ்பெஷல் கேரக்டர்: PS 2' இசை விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் நந்தினி கேரக்டரில் நடித்த நடிகை ஐஸ்வர்யாராய் பேசியதாவது:
இந்த விழாவில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி உங்கள் எல்லோருடைய அன்புக்கு எனது நன்றி என்று பேச்சை தொடங்கிய ஐஸ்வர்யாராய் அதன் பின் ’என்னுடைய இதயத்தில் இருந்து என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், ஏனென்றால் உங்களுடைய இந்த அளப்பரிய அன்பை நான் மிகவும் மதிக்கிறேன். இந்த படம் ஒரு மனதிற்கு மிகவும் பிடித்தமான படைப்பாக அமைந்துள்ளது. இந்த படத்தை கொண்டாடிய உங்களுக்கு தான் நான் முதலில் நன்றி செலுத்த விரும்புகிறேன்.
நான் மணிரத்னம் அவர்களின் படங்களில் பல கேரக்டர்களில் நடித்திருக்கிறேன். அந்த கேரக்டர்கள் எல்லாமே எனக்கு மனதிற்கு மிகவும் பிடித்தமான கேரக்டராக இருக்கும். குறிப்பாக இம்முறை எனக்கு அவர் நந்தினி என்ற கேரக்டரை கொடுத்திருக்கின்றார். அதற்கு அவருக்கு மிகவும் நன்றி
நந்தினி ஒரு கற்பனையான கேரக்டர் தான் என்றாலும் அது எனக்கு ஒரு ஸ்பெஷல் கேரக்டர். இந்த கேரக்டரை என்னை நம்பி கொடுத்த மணிரத்னம் சாருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அவர்கள் இந்த படத்தை மிகவும் அற்புதமாகவும் பிரமாண்டமாகவும் எடுத்து ஒவ்வொரு ரசிகரிடமும் கொண்டு போய் சேர்த்ததற்கு அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
ரஹ்மான் சார் அவர்களின் மிகப்பெரிய ரசிகை நான். என்னுடைய பல படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார், அவருக்கு எனது மிக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் அவர் ஒரு மேஜிக்கே செய்துள்ளார். இந்த அழகான மாலை நேரத்தை மேஜிக்காக மாற்றிய ரஹ்மான் சார் மற்றும் அவரது குழுவினர்கள் பாடகர்கள் அனைவருக்கும் எனது நன்றி
’பொன்னியின் செல்வன்’ என்ற இந்த அழகான படத்தை உருவாக்க உதவிய ஒவ்வொரு நபருக்கும் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் அனைத்து நட்சத்திரங்கள் அனைத்து குழுவினர்களையும் பணி என்பது மிகவும் அற்புதமானது,அபாரம் ஆனது. அனைவரும் மிகவும் கடினமாக உழைத்து உள்ளீர்கள்’ என்று ஐஸ்வர்யா ராய் பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com