உங்கள் குரலுக்கு எப்போதுமே சக்தி அதிகம் சார்.. அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்த இயக்குனர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சசிகுமார் நடித்த ‘நந்தன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை பாராட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்துக்கு ‘உங்கள் குரலுக்கு எப்போதுமே சக்தி அதிகம் சார்’ என்று இயக்குனர் இரா சரவணன் நன்றி தெரிவித்துள்ளார்.
‘நந்தன்’ படம் குறித்து அண்ணாமலை கூறியதாவது: OTT தளத்தில் ‘நந்தன்’ திரைப்படத்தைப் பார்த்தேன். பட்டியலின மக்களை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் சுயலாபத்திற்காக பட்டியலின மக்களை சுரண்டி ஆட்சி செய்யும் சர்வாதிகார அரசியல்வாதிகளை தோலுரித்துக் காட்டியிருக்கிறது இத்திரைப்படம்.
தனது தேர்ந்த நடிப்பின் மூலம் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் படும் இன்னல்களை நம் கண்முன் கொண்டு வந்த நடிகர் சகோதரர் திரு சசிகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் நடக்கும் அவல அரசியலை உள்ளபடியே காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் திரு இரா சரவணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பல ஆழமான கருத்துக்கள் நிறைந்த ‘நந்தன்’ திரைப்படம் காலத்திற்கும் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அண்ணாமலையின் பாராட்டுக்கு இயக்குனர் இரா சரவணன் நன்றி தெரிவித்து கூறியதாவது: உங்கள் குரலுக்கு எப்போதுமே சக்தி அதிகம் சார்… ‘நந்தன்’ படம் பார்த்து நீங்கள் பதிவிட்ட கருத்து, பட்டியலினப் பஞ்சாயத்து தலைவர்கள் மீதான அக்கறையைப் பெரிதாக்கி இருக்கிறது; ஒடுக்குமுறைகள் குறித்த விவாதங்களை தீவிரமாக்கி இருக்கிறது. ‘நந்தன்’ படத்தை பெரிய அளவில் பேசு பொருளாக்கி இருக்கிறது. பயணம், அரசியல், படிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு மத்தியில் ‘நந்தன்’ படம் பார்த்து கருத்து சொன்னதற்கும், சமூக நீதிக்கான குரலை பெரிதாக்கியதற்கும் மனமார்ந்த நன்றி சார்…
உங்கள் குரலுக்கு எப்போதுமே சக்தி அதிகம் சார்… ‘நந்தன்’ படம் பார்த்து நீங்கள் பதிவிட்ட கருத்து, பட்டியலினப் பஞ்சாயத்து தலைவர்கள் மீதான அக்கறையைப் பெரிதாக்கி இருக்கிறது; ஒடுக்குமுறைகள் குறித்த விவாதங்களை தீவிரமாக்கி இருக்கிறது. ‘நந்தன்’ படத்தை பெரிய அளவில் பேசுபொருளாக்கி… https://t.co/CkPpmyQqvV
— இரா.சரவணன் (@erasaravanan) October 19, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments