இயக்குனர் நந்தா பெரியசாமி அடுத்த படத்தில் ஹீரோ இவரா? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,May 12 2023]

இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் நடிக்கும் ஹீரோ குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

‘ஒரு கல்லூரியின் கதை’ ’மாத்தி யோசி’ ’அழகன் அழகே’ ’ஆனந்தம் விளையாடும் வீடு’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் நந்தா பெரியசாமி. மேலும் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. விஷால் சந்திரசேகர் இந்த படத்துக்கு இசையமைக்க இருப்பதாகவும் சுகுமார் ஒளிப்பதிவில், தினேஷ் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்கத்தில் இந்த படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 'இந்தியன் 2’ ‘கேம் சேஞ்சர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் சமுத்திரகனி, தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற ‘விநோதக சித்தன்’ என்ற படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஹீரோவாக அவர் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

2023ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படம் இதுதான் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

சீரியல் நடிகையை சரக்கடிக்க கூப்பிட்ட தயாரிப்பாளர்.. எல்லை மீறியதாக புகார்..!

 'ரூமுக்கு வா சரக்கு அடிக்கலாம்' என தயாரிப்பாளர் அழைத்து தன்னிடம் எல்லை மீறியதாக சீரியல் நடிகை ஒருவர் தயாரிப்பாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சொந்த கிராமத்திற்கு விசிட் அடித்த நடிகை சீதா.. க்யூட் வீடியோ வைரல்..!

நடிகை சீதா தனது சொந்த கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

இது முழுக்க முழுக்க வதந்தி, யாரும் நம்ப வேண்டாம்: 'இராவண கோட்டம்' படக்குழு அறிக்கை..!

சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான 'இராவண கோட்டம்' என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது,.

'FastX' படத்தில் பால்வாக்கர் மகள்.. இன்ஸ்டாவில் எமோஷனல் பதிவு..!

'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' படத்தின் 10வது பாகம் 'FastX' வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.