close
Choose your channels

இயக்குனர் நந்தா பெரியசாமி அடுத்த படத்தில் ஹீரோ இவரா? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Friday, May 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் நடிக்கும் ஹீரோ குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

‘ஒரு கல்லூரியின் கதை’ ’மாத்தி யோசி’ ’அழகன் அழகே’ ’ஆனந்தம் விளையாடும் வீடு’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் நந்தா பெரியசாமி. மேலும் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. விஷால் சந்திரசேகர் இந்த படத்துக்கு இசையமைக்க இருப்பதாகவும் சுகுமார் ஒளிப்பதிவில், தினேஷ் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்கத்தில் இந்த படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 'இந்தியன் 2’ ‘கேம் சேஞ்சர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் சமுத்திரகனி, தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற ‘விநோதக சித்தன்’ என்ற படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஹீரோவாக அவர் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment