வெளுத்து வாங்கும் சபாநாயகர் நான்சி பெலோசி… அடுத்த பனிப்போர்க்கு தயராகும் வெள்ளை மாளிகை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை அந்நாட்டு நடாளுமன்றத்தில் கொண்டுவரக் காணரமாக இருந்தவர் அவைத் தலைவர் நான்சி பெலோசி. அப்போது நடைபெற்ற கூட்டத்தில் அதிபர் ட்ரம்ப் அவைக்குள் வந்தபோது அங்கிருந்த அனைவருக்கும் கைக்குலுக்கி விட்டு நான்சிக்கு மட்டும் கைகுலுக்காமல் முகத்தை சுளித்து விட்டுச் சென்றார். இதைக் கவனித்த நான்சி கூட்டத்தின் கடைசியில் மரியாதை தெரியாத நபரின் அறிக்கையை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற அவையிலேயே ட்ரம்ப்பின் அறிக்கையை சுக்கு நூறாகக் கிழித்து எறியவும் செய்தார். இந்தக் காட்சிகள் ஊடகத்திடம் சிக்கி பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.
இந்த அளவிற்கு அவைத்தலைவர் நான்சிக்கும் அதிபர் ட்ரம்ப்பிற்கும் ஆன இடைவெளி அதிகரித்து இருக்கும் நிலையில் தற்போது நான்சி பெலோசி மீண்டும் ட்ரம்ப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வீசத் தொடங்கி இருக்கிறார். அதில் முக்கியமான குற்றச்சாட்டு அதிபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் ஏன் தன்னுடைய பணிகளை துணை அதிபரிடம் பகிர்ந்து கொள்ள வில்லை என்பது.
அடுத்து வெள்ளை மாளிகையில் அடுத்தடுத்து மூத்த அதிகாரிகளுக்கு எல்லாம் கொரோனா தொற்று ஏற்பட்டு வரும் நிலையில் ஏன் அதிபரின் உடல்நிலைக் குறித்து பொது வெளியில் வெளிப்படையான அறிக்கை வெளியிட வில்லை என்பது. இதுபோன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி நான்சி தற்போது வெள்ளை மாளிகைக்கு நெருக்கடி கொடுக்கத் துவங்கியிருக்கிறார்.
மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பதவியை பறிக்கும் நடவடிக்கைகளை நாளை முதல் துவங்க இருப்பதாகவும் அவர் செய்தியாளர்கள் மத்தியில் மிரட்டல் விடுத்து இருக்கிறார். அப்போது செய்தியாளர்கள் நான்சியிடம் 25 ஆவது சட்ட திருத்தத்தை அமுலுக்கு கொண்டு வருவீர்களா எனவும் கேள்வி எழுப்பி இருந்தனர். அந்தக் கேள்விக்கு பதில் அளித்த நான்சி இந்த விவகாரம் தொடர்பாக நாளை முதல் பேச இருப்பதாகவும் தகவல் தெரிவித்து இருக்கிறார்.
அமெரிக்காவின் 25 ஆவது சட்டத்திருத்தம் என்பது அமெரிக்க அதிபர் தனது மொத்த பொறுப்பையும் துணை அதிபரிடம் ஒப்படைக்க கோருவதாகும். இப்படி ஒரு சட்டத்தைப் பற்றித்தான் நான்சி பேச ஆரம்பித்து இருக்கிறார். இதனால் வெள்ளை மாளிக்கைக்கு நெருக்கடி ஏற்படும் எனவும் கருத்துக் கூறப்படுகிறது.
மேலும் அதிபரின் உடல் நலம் குறித்து பேசிய நான்சி வெள்ளை மாளிகையில் உள்ள முக்கிய அதிகாரிகள் ஒருவர்பின் ஒருவராக கொரோனாவுக்கு இலக்காகி வரும் நிலையில் ஏன் வெள்ளை மாளிகை உண்மையை மறைக்க வேண்டும் எனவும் நாட்டு மக்களுக்கு இதுபற்றி தெரிந்து கொள்ளும் உரிமை இருக்கிறது எனவும் காட்டமாகக் கருத்துக் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் அதிபர் கொரோனா தொற்றினால் தாக்கப்பட்டு இருந்தாலும் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு வந்து தனது அலுவலகப் பணிகளை தொடர்ந்து வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்து உள்ளது. ஆனால் நான்சி எழுப்பும் கேள்விகளால் மீண்டும் சர்ச்சை வெடிக்குமோ என்ற பதட்டமும் ஏற்பட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments