சூர்யா-விக்னேஷ் சிவன் படத்தில் இணைந்த மற்றொரு காமெடி நடிகர்

  • IndiaGlitz, [Sunday,November 27 2016]

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஏற்கனவே பழம்பெரும் நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் இயக்குனர் சுரேஷ் மேனன் நடிக்கவுள்ள செய்தியை பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் தற்போது மேலும் ஒரு காமெடி நடிகர் இணைந்துள்ளார்.
இளையதளபதி விஜய் நடித்த 'துப்பாக்கி' உள்பட பல படங்களில் காமெடி வேடம் ஏற்று கலக்கிய சத்யன் தான் தற்போது சூர்யா-விக்னேஷ் சிவன் படத்தில் இணைந்துள்ளார். விக்னேஷ் சிவனின் நடிகர், நடிகையர் தேர்வே இந்த படத்தின் எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவுக்கு ஜோடியாக முதன்முதலாக கீர்த்திசுரேஷ் நடிக்கும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைக்கின்றார். ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது.

More News

'திருப்பாச்சி' அஜித்துக்காக எழுதப்பட்ட கதையா? பேரரசு வெளியிடும் ரகசியம்

இளையதளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று 'திருப்பாச்சி'. இயக்குனர் பேரரசுவின் முதல்படமான இந்த படத்தின் கதை அஜித்துக்காக எழுதப்பட்டதாகவும், ஆனால் விஜய்யின் கால்ஷீட் தயாராக இருந்ததால் அவர் நடித்ததாகவும், இயக்குனர் பேரரசு பிரபல வார இதழ் ஒன்றின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அரவிந்தசாமி-த்ரிஷாவின் சதுரங்கவேட்டை-2 படத்தில் திடீர் மாற்றம்?

'தனி ஒருவன்' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆன அரவிந்தசாமி சமீபத்தில் 'சதுரங்க வேட்டை 2' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு நாளை மதியம் 2 மணிக்கு சென்னை லயோலா கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்திரா காந்தியை பிடல் காஸ்ட்ரோ கட்டிப் பிடித்தது ஏன்? சுவாரஸ்ய தகவல்

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வெற்றி பெற்றதோடு, கியூபா நாட்டு மக்களுக்கு வாழும் கடவுளாக திகழ்ந்த பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார் என்ற செய்தியை பார்த்தோம்.

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு நிர்வாகத்தின் முக்கிய வேண்டுகோள்

நடிகர் சங்க 63வது பொதுக்குழு நாளை பிற்பகல் 2 மணிக்கு சென்னை லயோலா கல்லூரியில் நடைபெறவுள்ளது.