கர்ப்பம், கருக்கலைப்பு, தற்கொலை முயற்சி: வதந்திக்கு விளக்கம் அளித்த விஜய் பட நாயகி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் படத்தில் நடித்த நாயகி ஒருவர் கர்ப்பமாக இருந்ததாகவும் அவர் கருக்கலைப்பு செய்ததாகவும் செய்தி வெளியானதால் தற்கொலை முயன்றதாகவும் வதந்தி ஒன்று வெளியானதை அடுத்து அந்த வதந்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்
விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’நண்பன்’. இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தார் நடிகை இலியானா என்பதும் இவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை என்பதும் தெரிந்தது
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த இலியானா தன்னை பற்றிய இரண்டு வதந்திகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு தான் கர்ப்பமாக இருந்ததாகவும் அந்த கர்ப்பத்தை கலைத்து விட்டதாகவும் வெளியான பொய்யான செய்தியை பார்த்து நான் சத்தமாக சிரித்து விட்டேன் என்றும் ஆனால் அதன் பிறகு எப்படித்தான் இப்படி எந்தவித ஆதாரமும் இல்லாமல் செய்து வெளியிடுகிறார்களோ என்று வருத்தப்பட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் இதேபோல் நான் தற்கொலைக்கு முயன்றதாகவும் தற்கொலைக்கு முயன்று பிழைத்துக் கொண்டதாகவும் ஒரு வதந்தி வெளியானது என்றும் இந்த வதந்திக்கும் நான் மிகவும் வருத்தப்பட்டேன் என்று கூறியுள்ளார்
கடந்து 2018 ஆம் ஆண்டு நடிகை இலியானா, ஆண்ட்ரு என்பவரை காதலித்தபோது கர்ப்பமாக இருந்ததாக வதந்திதான் சமூக வலைதளங்களில் பரவியது என்பதும் அந்த வதந்திக்கு இலியானா இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments