'காலா' குழுவினர்களுக்கு நானாபடேகர் கொடுத்த ஆச்சரியம்

  • IndiaGlitz, [Tuesday,March 06 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால் இந்த படத்தின் அனைத்து பணிகளும் இரவுபகலாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் நானாபடேகர் அவரது பகுதியின் டப்பிங் பணியை இன்று முடித்துள்ளார். இந்த படத்தின் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரண்டு பதிப்பிற்கும் அவர் தனது சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளார். தமிழில் அவர் மிகத்தெளிவாக டப்பிங் குரல் கொடுத்ததை பார்த்து படக்குழுவினர் ஆச்சரியம் அடைந்தனர். ஏற்கனவே நானா படேகர் நடித்த தமிழ்ப்படமான 'பொம்மலாட்டம்' படத்திற்கு நிழல்கள் ரவி டப்பிங் செய்திருந்த நிலையில் 'காலா' படத்திற்கு அவரே டப்பிங் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ்,  நானா படேகர், சமுத்திரக்கனி, ஹூமோ குரேஷி, சம்பத்ராஜ், அர்விந்த் ஆகாஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை தனுஷின் வொண்டர்பா நிறுவனம் தயாரித்துள்ளது.