'நம்ம வீட்டு பிள்ளை' மைலாஞ்சி பாடல் குறித்த தகவல்கள்

  • IndiaGlitz, [Tuesday,August 27 2019]

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'மைலாஞ்சி' என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்த செய்தி குறித்து ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் டி.இமான் இசையமைத்த இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளதாகவும், பிரதீப் குமார் மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் பாடியுள்ளதாகவும் தற்போது அறிவிக்கப்படுள்ளது. கடந்த வாரம் வெளியான இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'எங்க அண்ணன் பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார் என்பதும் அந்த பாடலை நாகேஷ் அஜீஸ் மற்றும் சுனிதி செளஹான் பாடியிருந்தனர் என்பதும் தெரிந்ததே.

சிவகார்த்திகேயன், அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்டி நட்ராஜ், அர்ச்சனா, யோகி பாபு, சூரி, ஆர்கே சுரேஷ், ஆடுகளம் நரேன், ரமா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
 

More News

இசையமைப்பாளராகும் பிரபல பின்னணி பாடகர்

பிரபல பின்னணி பாடகர்களான எஸ்பிபி, கேஜே ஜேசுதஸ் உள்ளிட்ட பலர் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் நிலையில் தற்போது இளம் பின்னணி பாடகர் ஒருவர் இசையமைப்பாளர் ஆகியுள்ளார். அவர்தான் பாடகர் அஜீஸ்

நடுக்கடலில் மனைவி அனுஷ்காவுடன் வெற்றியை கொண்டாடிய விராத் கோஹ்லி!

விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது.

யோகிபாபு படக்குழுவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய நித்யானந்தா

யோகிபாபு, வருண் நடிப்பில் முரட்டு சிங்கிள் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பப்பி'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று

கார்த்தியின் 'கைதி' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு:

கார்த்தி நடித்து வந்த 'கைதி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

ரூ.96க்கு தினமும் 10ஜிபி 4ஜி டேட்டா: பி.எஸ்.என்.எல் அதிரடி அறிவிப்பு

ஒரு காலத்தில் மொபைல் போனில் டேட்டா பயன்படுத்தினால் பர்ஸ் காலியாகிவிடும் அளவுக்கு அதிக காஸ்ட்லியாக இருந்தது. ஆனால் ஜியோ நிறுவனம் அறிமுகமான