'நம்ம வீட்டு பிள்ளையின் அடுத்த அட்டகாசமான அப்டேட்

  • IndiaGlitz, [Monday,August 26 2019]

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'எங்க அண்ணன்' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலை அடுத்து பலர் தங்கள் சமூக வலைதளங்களில் அண்ணன்கள் குறித்த பதிவுகளை பதிவு செய்து இந்த பாடலுக்கு பெருமை சேர்த்தனர்

இந்த நிலையில் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'மைலாஞ்சி' என்ற பாடல் ஆகஸ்ட் 28ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முதல் பாடலைப் போலவே இந்த இரண்டாம் பாடலையும் இசையமைப்பாளர் டி.இமான் ரசிகர்களை கவரும் வகையில் கம்போஸ் செய்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சிவகார்த்திகேயன், அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்டி நட்ராஜ், அர்ச்சனா, யோகி பாபு, சூரி, ஆர்கே சுரேஷ், ஆடுகளம் நரேன், ரமா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது
 

More News

அனுஷ்காவின் அடுத்த படத்தின் ரிலீஸ், டீசர் ரிலீஸ் குறித்த தகவல்!

பாகுபலி, பாகுபலி 2' ஆகிய இரண்டு பிரமாண்டமான படங்களில் நடித்த அனுஷ்கா அதன்பின் 'பாகிமதி' என்ற ஒரே படத்தில் மட்டும் நடித்தார். இந்த நிலையில் அனுஷ்கா

எமிஜாக்சனுக்கு என்ன குழந்தை? அவரே அறிவித்த வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் '2.0', விஜய்யுடன் தெறி' என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த எமி ஜாக்சன், தனது நீண்ட நாள் காதலரான ஜார்ஜ் என்பவரை சமீபத்தில் நிச்சயதார்த்தம்

தேசிய விருதை அடுத்து 'மிஸ் இந்தியா'வை நோக்கி செல்லும் கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த 'நடிகையர் திலகம் திரைப்படம்' அவருக்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த நிலையில் தற்போது அவர் போனி கபூர் தயாரிப்பில் ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

உங்கள காலி பண்றதுதான் என் பிளான்: சாண்டியிடம் கவின் ஆவேசம்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கவினை அவருக்கு நெருக்கமானவர்களே நாமினேஷன் செய்துள்ள நிலையில் கவின் புதிய அவதாரம் எடுத்துள்ளதாக தெரிகிறது

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன்:

ஆக்சன் கிங் அர்ஜுன் சமீபத்தில் விஷால் நடித்த 'இரும்புத்திரை' மற்றும் விஜய் ஆண்டனி நடித்த 'கொலைகாரன் ஆகிய படங்களில் நடித்த நிலையில் தற்போது ஜெயம்ரவி நடிக்கும்