'நம்ம வீட்டு பிள்ளை' படத்தின் அசத்தலான அப்டேட்

  • IndiaGlitz, [Monday,August 19 2019]

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த அசத்தலான அப்டேட்டை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரும் 23ஆம் தேதி வெள்ளியன்று காலை 11 மணிக்கு வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் படம் என்றாலே இசையமைப்பாளர் டி.இமான் அவர்கள் ஸ்பெஷலாக பாடல்களை கம்போஸ் செய்வார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா' படங்களை அடுத்து 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படத்திற்கு இசையமைத்து வரும் டி.இமானின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடலும் அட்டகாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன், அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்டி நட்ராஜ், அர்ச்சனா, யோகி பாபு, சூரி, ஆர்கே சுரேஷ், ஆடுகளம் நரேன், ரமா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.