close
Choose your channels

நம்ம பிளட் குரூப் ஏ, பி, ஓ அல்ல, டி.. சிம்ரன் வெளியிட்ட ஜாலி வீடியோ..!

Tuesday, May 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நம்ம பிளட் குரூப் ஏ, பி, ஓ அல்ல, டி என்று வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த 1997 ஆம் ஆண்டு ’விஐபி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின் அஜித், விஜய், சூர்யா உள்பட பல பிரபலங்கள் உடன் இணைந்து நடித்தவர் சிம்ரன் என்பதும் திருமணத்திற்கு பிறகு அவர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் சமீபத்தில் வெளியான ’அரண்மனை 4’ திரைப்படத்தில் ஒரு அம்மன் பாடலுக்கு சூப்பராக டான்ஸ் ஆடி இருந்தார் என்பது தெரிந்தது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சிம்ரனுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவ்வப்போது அவர் தனது டான்ஸ் வீடியோக்கள், குடும்ப புகைப்படங்கள், தான் நடிக்கும் படங்களின் விவரங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அவை வைரல் ஆகும் என்றும் தெரிந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அனைவருக்கும் டீ கொடுக்கும் சிம்ரன். டீ கிளாஸை கையில் வைத்துக்கொண்டே டான்ஸ் ஆடும் காட்சி அதில் உள்ளது. மேலும் நம்ம பிளட் குரூப் ஏ, பி அல்லது ஓ அல்ல, டி என்று அவர் குறிப்பிட்டுள்ளதோடு விரைவில் ஒரு ஆச்சரியத்தக்க வீடியோ வெளியாகும் என்றும் அதற்காக காத்திருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து சிம்ரன் ’சாய்லவ்’ என்ற பெயரில் ஒரு ஆல்பம் பாடலுக்கு டான்ஸ் ஆடி உள்ளதாகவும், அந்த பாடல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment