17 வயதில் நடிகை நமிதா எப்படி இருந்தார் தெரியுமா? வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,September 03 2021]

நடிகை நமீதா என்றாலே கொழுகொழு என குண்டான அவரது உடல் அமைப்பு தான் அனைவருக்கும் ஞாபகம் வரும் என்பதும் அதனாலேயே அவர் திரையுலகில் புகழ் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நமீதா தனது 17 வயதில் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அதில் அவர் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஸ்லிம்மாக காணப்படுகிறார்

நடிகை நமீதா முதன்முதலாக போட்டோஷூட் எடுக்க சென்றதன் மலரும் நினைவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 17 வயதில் மிகப்பெரிய கனவுகளுடன் மும்பையில் என்னுடைய முதல் போட்டோ ஷூட் நடந்தது. அந்த போட்டோ ஷூட் நடிகர், போட்டோ கிராபர் பொம்மன் இரானி நடத்தினார். இந்த போட்டோஷூட் 2000-ம் ஆண்டு நடந்தது என்றும் நமீதா தெரிவித்துள்ளார்

மேலும் ‘நான் என்னுடைய பெற்றோருடன் இந்த போட்டோஷூட்டில் கலந்து கொண்டேன் என்றும், போட்டோஷூட் முடிந்ததும் எங்கள் அனைவருக்கும் பெரிய சைஸ் பீட்சா வாங்கி கொடுத்தார்கள் என்றும், நான் மிகவும் மகிழ்ச்சியுடன் அதை சாப்பிட்டேன் என்று 17 வயதில் எடுக்கப்பட்ட முதல் போட்டோஷூட்டின் நினைவலைகளை நமீதா பகிர்ந்துள்ளார். 17 வயதில் எடுக்கப்பட்ட நமீதாவின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.