சின்னத்திரையில் மாஸ்-ஆக ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை நமீதா.....!

  • IndiaGlitz, [Saturday,August 14 2021]

தனியார் தொலைக்காட்சியான ஜீ-தமிழில் ஒளிபரப்பாகின்ற சீரியல் மூலம் நடிகை நமீதா ரீ-என்ட்ரீ கொடுக்கவுள்ளார்.

தமிழில் எங்கள் அண்ணா திரைப்படம் மூலம், நடிகர் கேப்டன் விஜயகாந்திற்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் நமீதா. இதையடுத்து மகா நடிகன், ஏய், ஆணை, சாணக்யா, அழகிய தமிழ் மகன், குரு சிஷ்யன் உள்ளிட்ட படங்களிலும், மலையாளத்தில் புலிமுருகன் படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட 2 மொழிகளில் உருவாகிவரும் ‘பௌவ்பௌவ்’ என்ற படத்தில் தற்போது நடித்துவருகிறார்.

பிக்பாஸ்-1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் நமீதா, கடந்த 2017-இல் வீரேந்திர சௌத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் ‘புதுப்புது அர்த்தங்கள்’ என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் ரீ-என்ட்ரீ கொடுக்கவுள்ளார் நயன்தாரா. இதை அந்த சேனலில் அதிகார்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.