இதுதான் நமீதாவின் திருமண அழைப்பிதழ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகையும் பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஒருவருமான நடிகை நமீதா தனது நீண்ட நாள் காதலரும், நடிகரும் தயாரிப்பாளருமான வீரா என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக சமீபத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில் வரும் 24ஆம் தேதி நடைபெறும் இந்த திருமணத்தின் திருமண அழைப்பிதழ் தற்போது சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பதியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நவம்பர் 22ஆம் தேதி புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு வரவேற்பும், நவம்பர் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை இஸ்கான் கோவிலில் காலை 5.30 மணிக்கு திருமணமும் நடைபெறவுள்ளதாக அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நமீதாவின் ரசிகர்கள் இப்பொழுது முதலே திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments