close
Choose your channels

மிஷ்கினின் 'பிசாசு 2' படத்தில் இணைந்த நமிதா!

Tuesday, July 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான ’பிசாசு’ திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘பிசாசு 2’ படத்தில் முக்கிய வேடத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் பிசாசாக நடிகை பூர்ணா நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் கார்த்திக் ராஜா இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் ஏற்கனவே ஒலிப்பதிவு செய்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நமீதா கிருஷ்ணமூர்த்தி என்பவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் தமன்னா நடித்த ’நவம்பர் ஸ்டோரி’ என்ற வெப்தொடரில் தமன்னாவின் தங்கையாக நடித்தவர் என்பதும் இந்த தொடரின் கிளைமாக்ஸில் அவருடைய கேரக்டரை வைத்து தான் கதை நகரும் என்பது தெரிந்ததே. அதேபோல் ‘பிசாசு 2’ படத்திலும் நமிதா கிருஷ்ணமூர்த்திக்கு மிக முக்கிய கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.



ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிந்துவிடும் என்றும் இவ்வருட இறுதியில் இந்த படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment