கேஎஸ் ரவிகுமாரின் அடுத்த படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகை

  • IndiaGlitz, [Sunday,July 28 2019]

பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் அடுத்த படத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணா நடிக்க உள்ளார் என்பது தெரிந்ததே. தெலுங்கில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 7ம் தேதி பாங்காக்கில் தொடங்க உள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பை அடுத்து ஹைதராபாத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் சோனல் சவுகான் என்ற நடிகை என்டிஆர் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடிகை வேதிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகையும் பிக்பாஸ் பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவருமான நமீதாவும் தற்போது இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. நமீதா இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும், அவரது கேரக்டர் இந்த படத்தின் கதையை திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. நமீதா ஏற்கனவே 'சிம்ஹா' என்ற படத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணாவுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரிலீஸ் ஆன விஜய் தேவரகொண்டா படத்தில் திடீர் மாற்றம்

விஜய் தேவரகொண்டா, மந்தனா ராஷ்மிகா நடிப்பில் உருவான 'டியர் காமிரேட்' என்ற திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது.

அஜித், விஜய் ரசிகர்களுக்கு இணையான வேகம் காட்டும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களான அஜித், விஜய் ஆகியோர்கள் நடிக்கும் திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்தால் அடுத்த ஒரு சில நிமிடங்களில் அவரது ரசிகர்கள் அந்த லுக்கின் போஸ்டர்களை

சூர்யா படத்திற்காக அடுத்தகட்ட பணியை தொடங்கிய மோகன்லால்!

சூர்யா நடிப்பில் இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காப்பான்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தீபாவளி அன்று விஜய்யுடன் மோதும் 'இளைய சூப்பர் ஸ்டார்'

தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில்

மீராவின் நம்பிக்கை வீண்போகாது! குறும்படம் போடும் கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று மீராவை கமல் வறுத்தெடுத்தார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் அதனை மெய்ப்பிப்பது