கேஎஸ் ரவிகுமாரின் அடுத்த படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகை

  • IndiaGlitz, [Sunday,July 28 2019]

பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் அடுத்த படத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணா நடிக்க உள்ளார் என்பது தெரிந்ததே. தெலுங்கில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 7ம் தேதி பாங்காக்கில் தொடங்க உள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பை அடுத்து ஹைதராபாத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் சோனல் சவுகான் என்ற நடிகை என்டிஆர் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடிகை வேதிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகையும் பிக்பாஸ் பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவருமான நமீதாவும் தற்போது இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. நமீதா இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும், அவரது கேரக்டர் இந்த படத்தின் கதையை திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. நமீதா ஏற்கனவே 'சிம்ஹா' என்ற படத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணாவுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.