நடிகை நமீதா ஒரு திருடி: பிரபல ஹீரோவின் ஷாக் பேச்சு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடிகை நமீதாவின் சீமந்தம் விழா நடைபெற்றபோது ’நமீதா ஒரு திருடி’ என பிரபல ஹீரோ ஒருவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக கடந்த 2000ஆம் ஆண்டுகளில் இருந்த நமீதா தொழிலதிபர் வீரேந்திர சவுத்ரி என்பதை கடந்த 2017 ஆம் ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சமிபத்தில் நமிதா கர்ப்பமான நிலையில் அவரது சீமந்தம் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் திரையுலகப் பிரபலங்களான ராதிகா சரத்குமார், ஸ்ரீகாந்த், பாக்யராஜ் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய நடிகர் ஸ்ரீகாந்த் பேசியபோது, ‘நமீதாவை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும் என்றும், நானும் அவரும் நிறைய படங்களில் பணியாற்றியுள்ளோம் என்று தெரிவித்தார். மேலும் நமீதா ஒரு குழந்தை மாதிரி என்றும் ஆனால் அவருக்கே இன்று குழந்தை பிறக்கப்போகிறது என்று கூறிய அவர் நமீதா பலமுறை சாக்லேட் திருடி நான் பார்த்திருக்கிறேன் என்றும் காமெடியாக கூறினார்.
ஒருமுறை படப்பிடிப்புக்கு சென்றபோது ஒரு கிலோ சாக்லேட்டை நமீதா வாங்கினார் என்பது என்றும் எதற்காக இவ்வளவு சாக்லேட் என்று கேட்டபோது சாப்பிட வேணும்ல என்று குழந்தை போல் அவர் கூறியதை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை என்றும் கூறினார்.
நடிகை நமீதா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் ’இந்திர விழா’ ’பம்பரக் கண்ணாலே’ உள்பட ஒரு சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com