ஆபாசமாக மிரட்டிய நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த அஜித், விஜய் பட நடிகை
- IndiaGlitz, [Tuesday,March 17 2020]
அஜித் நடித்த பில்லா, விஜய் நடித்த ‘அழகிய தமிழ்மகன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான நடிகை நமீதாவை சமூக வலைத்தளம் மூலம் நெட்டிசன் ஒருவர் மிரட்டியுள்ளார்.
நமீதாவை ஆபாச படங்களில் பார்த்ததாகவும், அந்த படங்களை வெளியிட போவதாகவும், நமீதாவின் சமூக வலைத்தள பக்கத்தை ஹேக் செய்து அதில் ஆபாச பதிவுகளை பதிவிடவுள்ளதாகவும் அந்த நபர் நமீதாவை மிரட்டியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்த நமிதா, ‘முடிந்தால் செய்து கொள்’ என்று பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி மிரட்டிய நபரின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு, இவர் போன்ற பெண்களை மதிக்க தெரியாதவர்களை சரியாக தண்டிக்க வேண்டும் என்றும், தன்னை அந்த நபர் ‘ஐட்டம்’ என்றே அழைத்து வருவதாகவும், பெண்கள் குறித்து இவர்கள் என்ன நினைத்து கொண்டிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை என்றும் பதிவு செய்துள்ளார்.
பெண்களை மதிக்க தெரிந்தவர்களே உண்மையான மனிதர்கள் என்றும், பெண்களை மதிக்க தெரியாதவர்கள் அவர்களுடைய தாயை இகழ்பவர்களாக கருதப்படுவார்கள் என்றும், நவராத்திரியின் ஒன்பது நாட்களையும் மகளிர் தினத்தையும் கொண்டாடுவது பெரியது இல்லை என்றும், பெண்களை மதிக்க தெரிந்தாலே போதும் என்றும் பதிவு செய்துள்ளார். நமீதாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on InstagramA post shared by Namitha Vankawala Chowdhary (@namita.official) on Mar 16, 2020 at 9:06pm PDT