சீமானுக்கு பதிலளித்த ராஜபக்சே மகன்
- IndiaGlitz, [Thursday,January 11 2018]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் 31ஆம் தேதி அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததும் அவருக்கு தமிழக, இந்திய தலைவர்கள் மட்டுமின்றி உலகத்தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். அவ்வாறு வாழ்த்தியவர்களில் ஒருவர் முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவும் ஒருவர்
ராஜபக்சேவின் மகன் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தது குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியபோது, 'தமிழினத்தை அழித்த ஒருவர் ரஜினியை வாழ்த்த வேண்டிய அவசியம் என்ன? நான் உள்பட பலர் கட்சி ஆரம்பித்தபோது வாழ்த்து தெரிவிக்காத நமல் ராஜபக்சே, ரஜினி கட்சி ஆரம்பித்த போது மட்டும் வாழ்த்து தெரிவித்ததன் ஏன்? என்று கேள்வி எழுப்பினார்
சீமானின் இந்த கேள்விக்கு தனது சமூக வலைத்தளத்தில் பதில் கூறியுள்ள நமல் ராஜபக்சே, 'இலங்கையில் உள்ள தமிழினத்தின் மீது உண்மையான அக்கறையில்லாதவர் சீமான். தமிழ் மக்களின் பிரச்சனைகளை கையிலெடுத்து அவர் தனது அரசியல் மற்றும் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்' என்று கூறியுள்ளார்.