கமல்ஹாசனை சந்திக்கின்றார் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்

  • IndiaGlitz, [Saturday,February 17 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயரை இன்னும் நான்கு நாட்களில் அறிவிக்கவுள்ள நிலையில் அவரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். அதேபோல் கமல்ஹாசனும் டி.என்.சேஷன் உள்பட பல முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவருமான நல்லக்கண்ணு அவர்கள் கமல்ஹாசனின் இல்லத்தில் அவரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.

ஏற்கனவே கமல்ஹாசனை இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட பலர் கடந்த சில நாட்களில் சந்தித்து பேசி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஷாலுக்கு வில்லனாகும் விஜய் ரசிகர்

விஷால், கீர்த்திசுரேஷ் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கி வரும் 'சண்டக்கோழி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் மலையாள நடிகர் தற்போது இணைந்துள்ளார்.

சீமராஜா' டைட்டில் ஏன் தெரியுமா? வெளிவராத புதிய தகவல்

பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான இன்று அவர் நடித்து வரும் படத்தின் டைட்டில் 'சீமராஜா' என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

அங்கன்வாடி பள்ளியில் கலெக்டர் மகள்: ஆச்சரியத்தில் பொதுமக்கள்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் தனது செல்ல மகளை அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார்.

தளபதி விஜய்க்கு இன்று முக்கியமான நாள்! எப்படி தெரியுமா?

அடுத்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நெருங்கி கொண்டிருக்கும் தளபதி விஜய், தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்பது தெரிந்ததே.

கமல்ஹாசனின் முதல் அரசியல் பொதுக்கூட்டத்தில் திடீர் மாற்றம்

நடிகர் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை இராமநாதபுரத்தில் உள்ள அப்துல்கலாம் இல்லத்தில் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்