அரசியலுக்கு தீபா ஆசைப்படும்போது, கமல் ஆசைப்படக்கூடாதா? நல்லக்கண்ணு
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் அவருண்டு, அவருடைய உயிர் மூச்சான சினிமா உண்டு என்று இருந்த நிலையில் அவரை தேவையில்லாமல் ஒருசில அரசியல்வாதிகள் சீண்டிவிட்டதால் தற்போது விஸ்வரூபம் எடுத்து ஆட்சியாளர்களின் சிம்ம சொப்பனமாக மாறியுள்ளார்.
இந்த நிலையில் அரசியல் களத்தில் இருந்தே கமல்ஹாசனுக்கு ஆதரவு குவிந்துள்ளது. ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்பட பல முக்கிய அரசியல்வாதிகள் கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுத்துள்ள நிலையில் தற்போது பொதுவாழ்வில் தூய்மையானவர் என்று அனைத்து கட்சி அரசியல் தலைவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் முத்த தலைவர் நல்லகண்ணு அவர்களும் கமல்ஹாசனுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து நல்லக்கண்ணு கூறியதாவது: அரசியல் என்பது யாருக்கும் பட்டா போட்டு கொடுக்கப்படவில்லை. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி கூட அரசியிலுக்கு வர நினைத்தார். வரட்டுமே...முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு எல்லாரும் முதலமைச்சர்ன்னு போட்டுக்கிறாங்க.
தீபா கூட முதலமைச்சரா வரனும்னு ஆசைப்பட்டாங்க. அது அவங்க இஷ்டம். அதனால் கமல் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு எப்படி சொல்ல முடியும். அவரும் வரலாம். என நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments