கமல்-நல்லக்கண்ணு சந்திப்பில் நடந்தது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்கள் இன்று கமல்ஹாசனின் இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து இருதரப்பினர்களும் மரியாதை நிமித்த சந்திப்பு என்று தெரிவித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் கூறியபோது, 'கட்சியை தாண்டி மக்களுக்காக சேவை செய்து வருவதால் நல்லகண்ணுவை சந்தித்தேன். இடதுசாரி தலைவர்களை மட்டும் அல்ல அனைவரையும் சந்திப்பேன். மக்களுக்காக யார் சேவை செய்தாலும் அவர்களை மதிக்க கடமைப்பட்டுள்ளேன். மேலும் மதுரையில் வரும் 21ஆம் தேதி நடக்கும் மாநாட்டில் பங்கேற்க நல்லகண்ணு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்' என்று கூறினார்.
இந்த சந்திப்பு குறித்து நல்லக்கண்ணு அவர்கள் கூறியபோது, 'கமல் என்னிடம் ஆலோசனை எதுவும் பெறவில்லை; மூத்த தலைவர் என்ற முறையில் மரியாதைக்காக சந்தித்தார். கமல் தன்னுடைய அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து என்னிடம் கூறினார். நான் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவர் பல சமூக விழிப்புணர்ச்சி திட்டங்களை வைத்துள்ளார். அவரது கட்சி செயல்பாட்டுக்கு வந்தபின்னர் தான் அவரது கட்சி குறித்து மேலும் கூற முடியும்' என்று கூறினார்.
கமல்ஹாசன் - நல்லக்கண்ணு சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com