வேலூர் சிறையில் தற்கொலைக்கு முயற்சித்தாரா நளினி: பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Tuesday,July 21 2020]

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் ஏழு பேர்களில் நளினி மற்றும் அவரது கணவர் முருகன் ஆகிய இருவர் என்பது தெரிந்ததே. ஏழு பேர்களையும் விடுதலை செய்ய தமிழக சட்டமன்றம் தீர்மானம் இயற்றியும் இந்த தீர்மானத்தின் மீது இன்னும் தமிழக கவர்னர் முடிவெடுக்காததால் இவர்கள் இன்னும் விடுதலையாகவில்லை.

இந்த நிலையில் நேற்று இரவு வேலூர் பெண்கள் சிறையில் துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொள்ள நளினி முயன்றதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் சிறையில் இருக்கும் இன்னொரு பெண் ஆயுள் தண்டனை கைதிக்கும், நளினிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் இந்தப் பிரச்சனையின் காரணமாக அந்த பெண், சிறை ஜெயிலரிடம் புகார் அளித்ததாகவும் தெரிகிறது.

இந்த புகார் குறித்து ஜெயிலர் நளினியிடம் விசாரணை செய்ததாகவும் இந்த விசாரணையால் மன உளைச்சல் ஏற்பட்டு நளினி தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி ’ஊரடங்கு காரணமாக தன்னால் நளினியுடன் தன்னால் பேச முடியவில்லை என்றும் ஆனால் மனதளவில் திடமாக உள்ள பெண் நளினி என்றும் அவர் தற்கொலைக்கு முயன்று இருப்பது பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

More News

பார்ட்னர் ஷிப்பில் இந்திய-அமெரிக்க கப்பற்படை!!! அரண்டுபோன சில நாடுகள்!!!

இந்திய – சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட குழப்பம் கடந்த சில மாதங்களாக இருநாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமனார் உள்ளிட்ட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மகளால் சீயான் விக்ரமுக்கு கிடைத்த பதவி உயர்வு: குவியும் வாழ்த்துக்கள்

சமீபத்தில் திருமணமான மகளால் சீயான் விக்ரமுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் 

இன்று முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு: திருப்பதியில் பரபரப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவில் பெரிய ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் மற்றும் 15 அர்ச்சகர்கள் உள்பட திருப்பதியில் மட்டும் சுமார் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

26 வயது பெண் டிவி ரிப்போர்ட்டர் சாலை விபத்தில் பலி!

26 வயது பெண் ரிப்போர்ட்டர் ஒருவர் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்த சம்பவம் ஊடகவியலாளர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது