சீரியல் நடிகையின் திருமணம்… வைரலாகும் நட்சத்திரா நாகேஷின் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமாகிப் பின்னர் சீர்யல் நடிகையாகவும் தொடர்ந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகையாகவும் வலம்வருபவர் நடிகை நட்சத்திரா நாகேஷ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராகவ் என்பவரை காதலித்து வருவதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நேற்று அவருடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு தந்தி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “வானவில்“ எனும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர்தான் நட்சத்திரா நாகேஷ். அதற்குப் பிறகு பிரபலத் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பான “சன் சிங்கர்ஸ்“ போன்ற முன்னணி நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக பணிப்புரிந்தார். தொடர்ந்து “ஜோடி நம்பர் ஒன்“ நிகழ்ச்சியிலும் அவர் பங்குகொண்டார்.
மேலும் “வாணி ராணி“, “நாயகி“, “லட்சுமி ஸ்டோர்ஸ்“, “ரோஜா“, “மின்னலே“ போன்ற பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் முன்னணி கேரக்டரில் நடித்துள்ளார். தற்போது “திருமகள்“, “தமிழும் சரஸ்வதியும்“ போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். சின்னத்திரையைத் தவிர, “சேட்டை“, “மிஸ்டர் லோக்கல்“, “இரும்பு குதிரை“, வாயை மூடி பேசவும்“ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தற்போது “ஹே சினாமிகா“, “வஞ்சகன்“, “வணிகன்“ போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் தனது நீண்டகால காதலர் ராகவ் என்பவரை நடிகை நட்சத்திரா நாகேஷ் நேற்று கைப்பிடித்துள்ளார். இவருடைய திருமணப் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. சங்கீத், மெஹந்தி நிகழ்ச்சி என இவருடைய திருமணங்கள் 3 நாட்கள் நடைபெற்றதாகவும் அதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நடிகை நட்சத்திராவிற்கு அவருடைய ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com