ஆளுனர் கொடுத்த அதிரடி புகார்: நக்கீரன் ஆசிரியர் திடீர் கைது!

  • IndiaGlitz, [Tuesday,October 09 2018]

ஆளுனர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றின் பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் குறித்து தவறாக செய்தி வெளியிட்டதாக ஆளுனர் மாளிகை புகார் அளித்தது.

இந்த புகாரின் அடிப்படையில் சற்றுமுன் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார். இன்று புனே செல்வதற்காக அவர் சென்னை விமான நிலையம் வந்தபோது கைது செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.