பாபநாசம் திரைப்பட பாணியில் நடந்த கொலை.. ஆதாரங்களுடன் கைது செய்த போலீஸ்..!

  • IndiaGlitz, [Monday,February 03 2020]

மகாராஷ்டிராவின் நாக்பூர் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் இளைஞர் ஒருவரை கொன்று அவரது சடலத்தை பாபநாசம் திரைப்பட பாணியில் உணவகம் ஒன்றில் மறைத்து வைத்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, நாக்பூரின் காப்சி பகுதியில் கிராம்கார் என்பவரை கொன்று அவரது இருசக்கர வாகனத்துடன் சடலத்தை உணவகம் ஒன்றின் பின்பக்கம் புதைத்து வைத்துள்ளனர். உயிரிழந்த கிராம்கார் ஹால்டிராம் நிறுவனத்தில் எலக்ட்டிரிஷியனாக பணியாற்றி வந்துள்ளார்.

இதில் முக்கிய குற்றவாளியான தாகூர்(24) உணவகம் நடத்தி வந்துள்ளார். இவர், கிராம்கார் என்பவரின் மனைவியுடன் தொடர்பில் இருந்து வந்ததாக கூடுதல் ஆணையர் நிலேஷ் பார்னே தெரிவித்துள்ளார்.

தனது மனைவியுடன் தாகூர் என்பவருக்கு இருக்கும் தொடர்பை அறிந்த கிராம்கார் அந்த ஊரை காலி செய்துவிட்டு பக்கத்தில் உள்ள வர்தா மாவட்டத்திற்கு குடிபுகுந்துள்ளார். இதைத்தொடர்ந்து, கடந்த டிச.28ம் தேதியன்று, தனது இருசக்கர வாகனத்தில் தாகூரின் உணவகத்திற்கு வந்த கிராம்கார் இனி தனது மனைவியுடன் எந்த தொடர்பும்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே மோதல் நிலவியுள்ளது. இதில், கிராம்காரின் தலையில் சுத்தியலை கொண்டு தாகூர் கடுமையாக தாக்கியுள்ளார். இதில், சம்பவ இடத்திலே கிராம்கார் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து தான், தாகூர் பாபநாசம் திரைப்பட பாணியில் இந்த கொலையை மறைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது உணவகத்தில் உள்ள சமையல்காரர் மற்றும் மற்றொரு உதவியாளரின் உதவியுடன், உடலை ஒரு இரும்பு டிரம்மில் வைத்து, ஆதாரங்களை அழிக்க சதித்திட்டம் தீட்டியுள்ளார். பின்னர் ஒரு நபரை அழைத்து, உணவகத்தின் கொல்லைப்புறத்தில் 10 அடி ஆழத்தில் குழி தோண்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். பின்னர் 50 கிலோ உப்பை அந்த குழிக்குள் கொட்டி குழியை நிறப்பியுள்ளார். அதன் மீது சடலத்தை வைத்து மேல் மன்னை போட்டு மூடியுள்ளார். இந்த குழிக்குள்ளேயே அவரது இருசக்கர வாகனத்தையும் வைத்து புதைத்துள்ளார்.

இதன் பின்னர் அவரது செல்போனையும் ராஜஸ்தான் செல்லும் லாரியில் தூக்கி வீசியுள்ளார். இதனிடையே, கிராம்கார் வீடு திரும்பாதது குறித்து அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த போலீசார் கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில் தாகூரின் உணவகத்தை நோட்டமிட்டு வந்துள்ளனர். இதையடுத்து, உறுதியான தகவல்கள் கிடைத்த பின்னர் குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

More News

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி சுகாதாரத் துறை அமைச்சர் விளக்கம்

சீனாவில் இருந்து இதுவரை தமிழகத்துக்கு 242 பேர் வந்துள்ளனர். இவர்களில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை

சிவகார்த்திகேயனின் 14வது படம் குறித்த முக்கிய அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வந்த சயின்ஸ் பிக்சன் திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு

பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு கொரோனா பாதிப்பா? 

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

பிரபல இயக்குனரின் தயாரிப்பில் யோகிபாபு: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு சமீபத்தி ரஜினி, அஜித், விஜய் உள்பட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

தமிழ் திரைப்படத்தின் ஹீரோவாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர், சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர் ஹர்பஜன் சிங் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழில் டுவீட் செய்து தமிழ் மக்களை கவர்ந்து வருகிறார் என்பது தெரிந்ததே.