ரஜினிகாந்த் இடத்தை ராகுல்காந்திக்கு கொடுத்த நக்மா

  • IndiaGlitz, [Monday,April 16 2018]

நடிகை நக்மா தற்போது அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவராக உள்ளார்  என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் புதுச்சேரியில் அவர் தற்போது 6 நாள் சுற்றுப்பயணம் செய்து அம்மாநில மக்களை சந்தித்து பல்வேறு நலத்திட்ட உதவி விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்

இந்த நிலையில் சோரப்பட்டு என்ற கிராமத்தில் பெண்கள் மத்தியில் நக்மா பேசினார். அப்போது அப்பகுதி பெண்கள் நக்மாவை ஒரு பாட்டு பாடுமாறு கேட்டு கொண்டனர்.

உடனே பாட்ஷா படத்தின் பாடலான 
அழகு... அழகு.. 
நீ நடந்தால் நடையழகு...
நீ சிரித்தால் சிரிப்பழகு...
நீ பேசும் தமிழ் அழகு... 
நீ ஒருவன் தானழகு... என்ற பாடலை பாடினார்.

இந்த பாடலை பாடியவுடன் அங்கிருந்த பொதுமக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி என்று கோஷமிட்டனர். உடனே சுதாரித்த நக்மா, நான் இந்த பாடலை ராகுல்காந்திக்காக பாடினேன், ரஜினிக்காக அல்ல என்று கூறினார். மேலும் இன்றைய நம் பாட்ஷா ராகுல்காந்திதான் என்று கூறினார். 

நக்மாவின் இந்த பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். என்றுமே பாட்ஷா என்றாலே ரஜினிதான் என்று அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

More News

'புலிகேசி 2' படத்தில் நடிக்க முடியாது: வடிவேலுவின் பரபரப்பு கடிதம்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவாகி வரும் 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி 2' படத்தில் வடிவேலு நடிக்க மறுத்துவருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர்

16 வயது சிறுமி உள்பட 100 பெண்களை சீரழித்த தயாரிப்பாளர்: ஸ்ரீரெட்டி திடுக் தகவல்

டோலிவுட் திரையுலகில் கடந்த சில நாட்களாக நடிகை ஸ்ரீரெட்டி, பாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார். ஸ்ரீரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் வெளியாகியுள்ள பட்டியலில்

டுவிட்டரில் இருந்து வெளியேறுகிறாரா காயத்ரி ரகுராம்?

பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது அவரை வில்லன் போல் பார்த்த பொதுமக்களும் நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

சினிமா ஸ்டிரைக்கால் சோர்வடைந்து வருகிறேன்: அரவிந்தசாமி

கடந்த மார்ச் 1ஆம் தேதியில் இருந்து கோலிவுட் திரையுலகினர் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான கட்டணங்களை குறைக்க வேண்டும்

தாய்ப்பாலும் நதிநீரும் ஒன்றுதான்: காவிரி விவகாரம் குறித்து பிரபல நடிகர்

காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் பொதுமக்களும், மாணவர்களும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.