இந்தியா-சீனா, எது உண்மையான குடியரசு நாடு: நக்மாவின் கேள்விக்கு பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்
- IndiaGlitz, [Sunday,December 22 2019]
குடியுரிமை சீர்திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 20 பேர் மரணம் அடைந்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் உலகெங்கும் அரசுகளை எதிர்த்து போராட்டம் நடந்து கொண்டுதான் வருகின்றன. ஆனால் இந்தியாவில் மட்டும்தான் போராட்டத்தின்போது அதிக நபர்கள் உயிரிழக்கின்றனர் என நடிகையும் காங்கிரஸ் பிரமுகருமான நக்மா தெரிவித்துள்ளார்.
ஹாங்காங் பிரச்சினைக்காக சீனாவில் ஏழு மாதங்கள் போராட்டம் நடந்தது என்றும் ஆனால் இந்த போராட்டத்தில் இரண்டே இரண்டு பேர் மட்டுமே மரணமடைந்தார்கள் என்றும் இந்த ஏழு மாதத்தில் 6505 பேர்கள் மட்டுமே காவலில் வைக்கப்பட்டதாகவும் நக்மா குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்தியாவில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கடந்த 10 நாட்களில் மட்டும் 20 பேர் மரணம் அடைந்துள்ளார்கள் என்றும், ஒரே வாரத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட நக்மா, இதிலிருந்து எது உண்மையான குடியரசு நாடு என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நக்மாவின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். ’ஹாங்காங் போராட்டத்தின்போது ஒரு பொதுச்சொத்து கூட சேதப்படுத்தப்படவில்லை என்றும் ஒரு போலீஸ்கார் கூட தாக்கப்படவில்லை என்றும் ஆனால் இந்தியாவில் நடந்த போராட்டத்தில் போலீஸ்காரர்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாகவும் கோடிக்கணக்கான பொதுச்சொத்துக்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாகவும் ஒரு நெட்டிசன் குறிப்பிட்டுள்ளார். மேலும் உண்மையான குடியரசு நாடான சீனாவுக்கே நீங்கள் சென்று விடலாமே என்றும் ஒரு நெட்டிசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Protests against govt's take place all over the world but how a democratic govt handles them is extremely telling. The manner in which BJP govt has handled the Anti-CAA protests around the country is reflective of their dictatorial temperament & ideology. pic.twitter.com/nk46ldaEuj
— Congress (@INCIndia) December 22, 2019