தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் பதவி: நடிகை நக்மா திடீர் நீக்கம்

  • IndiaGlitz, [Tuesday,June 05 2018]

கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் மகளிர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்து வரும் நடிகை நக்மா, சற்றுமுன் தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக இந்த பதவியில் பாத்திமா ரோஸ்னா என்பவரை காங்கிரஸ் தலைமை நியமனம் செய்துள்ளது.

தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து நக்மா விடுவிக்கப்பட்டாலும் அவர் ஜம்மு - காஷ்மீர் மற்றும் புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக தொடர்ந்து செயல்படுவார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து நக்மா திடீரென விடுவிக்கப்பட்டது ஏன் என்பது குறித்த தகவலை காங்கிரஸ் கட்சி தெரிவிக்கவில்லை.