கங்குலிக்கு கடுமையான கண்டனம் தெரிவித்த ரஜினி பட நடிகை!

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் மகள் சனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் சமீபத்தில் ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்த இந்த பதிவிற்கு நெட்டிசன்களிடம் இருந்து பயங்கர எதிர்ப்பு வந்ததை அடுத்து இதற்கு விளக்கம் அளித்த கங்குலி, ‘தனது மகள் சின்னப்பெண் என்றும் குடியுரிமை குறித்து அவர் பதிவு செய்ததை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் அவளை விட்டு விடுங்கள்' என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கங்குலியின் இந்த கருத்துக்கு நடிகை நக்மா தனது சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். கங்குலியின் மகள் சனா தற்போது ஓட்டுப்போடும் வயதுக்கு வந்து விட்டதாகவும் அவர் தனது கருத்தை சுதந்திரமாக தெரிவிக்க கங்குலி அனுமதிக்க வேண்டும் என்றும், குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து சனா கூறிய கருத்துக்கள் வரவேற்கப் படவேண்டிய ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். நக்மாவின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 2000ம் ஆண்டுகளில் கங்குலியும் நக்மாவும் காதலித்து வந்ததாகவும் அதன் பின்னர் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டதாகவும் ஒரு வதந்தி உலாவி வந்தது என்பது தெரிந்ததே. ரஜினியின் ‘பாட்ஷா’ உட்பட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த நடிகை நக்மா தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து முழு நேர அரசியல்வாதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.