மக்கள் மனதை ரஜினி புரிந்து கொள்ள வேண்டும்: ரஜினிக்கு அட்வைஸ் செய்த நக்மா!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அரசியல் அட்வைஸ் செய்யாதவர்கள் இந்தியாவில் யாருமே இல்லை என்ற வகையில் ஒரு மீம்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைரலாகி வந்தது தெரிந்ததே. அந்த வகையில் அவருக்கு தொடர்ச்சியாக அரசியல் குறித்து பலர் அட்வைஸ் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகையும், பாட்ஷா படத்தில் ரஜினியுடன் நடித்தவரும், காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான நடிகை நக்மா ரஜினிக்கு அட்வைஸ் செய்துள்ளார்

திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் வெற்றி வாய்ப்பை பெறுவது ஒரு சிலருக்கு மட்டுமே நடக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா, என்டிஆர் போன்றவர்கள் மட்டுமே திரைத்துறையில் இருந்து வந்து ஆட்சியை பிடித்தார்கள். நான் கடந்த 17 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறேன்.

ரஜினிகாந்த் அவர்கள் மாற்று அரசியலை முன்வைப்பது புதிய முயற்சிதான். ஆனால் மாற்று அரசியலை முன்வைக்கும் அவர், மக்கள் மனதை புரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்கு எது தேவை என்பது குறித்து அவர் தெரிந்து கொள்ள வேண்டும். சிஏஏ போன்ற சட்டத்தினால் யாருக்கு பாதிப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு அவர் கருத்து தெரிவிக்க வேண்டும்

ரஜினிகாந்தின் புதிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். இருப்பினும் அவர் அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார்? கட்சியை எப்படி நடத்த போகிறார்? மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு அரசியலுக்கு வர வேண்டும் அவருடைய புதிய மாற்று அரசியல் முயற்சிக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள் என்று நடிகை நக்மா தெரிவித்துள்ளார்

More News

ஜுவான்டஸ் டிபாலாக்கு கொரோனா பாதிப்பா..?!

டிபாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல்கள் குறித்து ஜுவான்டஸ் அணியாது எவ்வித விளக்கமும் கொடுக்கவில்லை.                              

ரஜினியை கலாய்த்த ரோபோ சங்கர் படக்குழுவினர்?

ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது தனது அரசியல் கண்ணோட்டம் குறித்த சில தகவல்களை வெளிப்படையாக கூறினார். அவரது சில கருத்துக்கள் ரசிகர்களுக்கு வருத்தத்தையும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு

ரஜினியை ஒரு அற்புத மனிதராக பார்க்கின்றேன்: பாரதிராஜா அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தனது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அவர் பேசிய அரை மணி நேர பேச்சில் முதல்வர் பதவிக்கு தகுதியான

ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு: புதிய தேதி அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது.

பெங்களூருவில் GOOGLE ஊழியருக்கு கொரோனா தொற்று..?! பரவாமல் தடுக்குமா அரசு..?!

எந்த ஒரு அறிகுறியும் தெரிவதற்கு முன்னர் வரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஊழியர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்ததாக கூகுளின் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.