மகளின் ஆபாச படத்தை காட்டி அம்மாவையும் மிரட்டி பணிய வைத்த காசி: திடுக்கிடும் தகவல்
- IndiaGlitz, [Saturday,May 16 2020]
கல்லூரி மாணவிகள் உள்பட பல பெண்களை மிரட்டி தனது காம இச்சைக்குப் பயன்படுத்திக் கொண்ட நாகர்கோவில் காசி மீது பெண் டாக்டர் ஒருவரும் கல்லூரி மாணவிகள் சிலரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். காசியை விசாரணை செய்துவரும் போலீசார் அவரிடம் ஏமாந்த பெண்கள் குறித்த தகவல்கள் திடுக்கிட வைத்துள்ளன.
ஏற்கனவே கல்லூரி மாணவிகள், பள்ளி சிறுமிகள் உள்பட பலர் நாகர்கோவில் காசியிடம் மயங்கி தங்கள் வாழ்வை தொலைத்த நிலையில் தற்போது சில குடும்பப் பெண்களும் காசியின் காம இச்சைக்கு பலியாகி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்தபோது மகளை சீரழித்து அவரின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவருடைய அம்மாவிடம் காட்டி மிரட்டி அம்மாவையும் தனது வலையில் வீழ்த்தி உள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்த தகவல்கள் காசியிடம் இருந்து கைப்பற்றிய லேப்டாப்பில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் இதனை அடுத்து காசியிடம் மேலும் தீவிர விசாரணையை போலீசார் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சிறுமிகள், இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள் என நூற்றுக்கணக்கான பெண்கள் காசியிடம் ஏமாந்து இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.