காசி விவகாரம்: நாகர்கோவில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு 

நாகர்கோவிலைச் சேர்ந்த காசியும் அவரது நண்பர்களும் பள்ளி மாணவிகள் முதல் குடும்பப் பெண்கள் வரை நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்வை சீரழித்த சம்பவம் தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இது குறித்து பெண் டாக்டர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாகர்கோவில் காசியும், அவரது நண்பர் ஜினோ என்பவரும் கைது செய்யப்பட்டார்கள். காசியின் இன்னொரு நெருக்கமான நண்பர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காசியை ஏற்கனவே காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்ததாகவும் காசியின் லேப்டாப்பில் இருந்து பல குடும்பப் பெண்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்ததாகவும், மகளை ஆபாசபடம் எடுத்து தாயை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் செய்திகள் வெளியானது.

இதனை அடுத்து மீண்டும் காசியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சிபிசிஐடி போலீசார் நாகர்கோவில் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது நாகர்கோவில் நீதிமன்றம் சிபிசிஐடிக்கு அனுமதி கொடுத்துள்ளது. நாகர்கோவில் காசி மற்றும் அவரது நண்பர் ஜினோவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. இதனை அடுத்து நாளை முதல் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

More News

வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பி, சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டவர் திடீர் மரணம்: அதிர்ச்சி தகவல் 

வெளி நாட்டிலிருந்து தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களுக்கு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. இதன்படி மலேசியாவில் இருந்து

100 வயது மூதாட்டியை கட்டிலோடு இழுத்து வங்கிக்கு சென்ற 60 வயது மகள்: அதிர்ச்சி வீடியோ

100 வயது மூதாட்டியை அவரது 60 வயது மகள் கட்டிலோடு வங்கிக்கு இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

'விஸ்வாசம்' பட தயாரிப்பாளருக்கு கிடைத்த புதிய பதவி

கமல்ஹாசன் நடித்த 'மூன்றாம் பிறை'என்ற படம் தொடங்கி தமிழில் பல திரைப்படங்களை தயாரித்தவர் சத்யஜோதி தியாகராஜன். இவர் சமீபத்தில் தயாரித்த அஜித் நடித்த 'விஸ்வாசம்' சூப்பர் ஹிட்டாகி பெரும் வசூலை வாரி குவித்தது. 

எனக்கும் மன அழுத்தம் இருந்தது, இறந்துவிடுவேனோ என பயந்தேன்: பிரபல நடிகை

நடிகர் சுஷாந்த்சிங் நேற்று தற்கொலை செய்து கொண்டது இந்திய திரையுலகையே உலுக்கிவிட்டது என்று கூறலாம். 34 வயதில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வது என்பது மிகப்பெரிய கொடுமையாக பார்க்கப்படுகிறது.

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு: என்னென்ன இயங்கும்? எப்பொழுது வரை இயங்கும்?

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு வரும் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கின்போது என்னென்ன இயங்கும்?