பிக்பாஸ்ன்னா இப்படி இருக்கனும்.. ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய நாகார்ஜூனா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக பிக் பாஸ் தெலுங்கு சீசன் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று வெளியான புரமோ வீடியோவில், ஒரு போட்டியாளர் மீது ஆத்திரமடைந்த நாகார்ஜுனா, அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான அபய் நவீன், சில பாடி லாங்குவேஜ் மற்றும் அருவருக்கத்தக்க செயல்களை செய்ததை அடுத்து, நாகார்ஜுனா தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், அவருக்கு ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுமாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், அபய் நவீன் கும்பிட்டு, மன்னிப்பு கேட்டு கொண்டதோடு, இந்த ஒரு முறை மன்னித்து விடுமாறு வேண்டியதாகவும் கூறினார். ஆனால், தனது முடிவில் உறுதியாக இருப்பதாக கூறிய நாகார்ஜுனா, உடனடியாக பிக் பாஸ் வீட்டின் கதவை திறக்குமாறும், அபய் நவீனை வெளியேறுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, அபய் நவீன் இன்று வீட்டை விட்டு வெளியேறுவார் என்று தெரிகிறது. இது குறித்த காட்சிகள் இன்று ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் இப்படி இருக்க வேண்டும் என்றும், தமிழில் விஜய் சேதுபதி நடத்தும் நிகழ்ச்சியும் இதுபோன்று உறுதியான முடிவுகளை எடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று கமெண்ட் பகுதியில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்."
RED card for not following the Bigg Boss Telugu rules! Shocking 😳😳
— BB Mama (@SriniMama1) September 21, 2024
Prudhvi raj goes with red card ♦️??
Lets see!! #BiggBossTelugu8
pic.twitter.com/fT22yCC42P
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments