சமந்தா குறித்து சர்ச்சை பேச்சு: தைரியமாக சட்ட நடவடிக்கை எடுத்த நாகார்ஜுனா..!

  • IndiaGlitz, [Friday,October 04 2024]

நடிகை சமந்தா விவாகரத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தெலுங்கானா அமைச்சர் சுரேகா மீது நடிகர் நாகார்ஜுனா சட்ட நடவடிக்கை எடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, சட்டப்படி விவாகரத்து பெற்ற நிலையில், இந்த விவாகரத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தெலுங்கானா மாநில அமைச்சர் சுரேகா பேசினார்.

முன்னாள் அமைச்சர் கே.டி. ராமராவ் அவர்கள் சமந்தாவை விரும்பியதாகவும், நாகார்ஜுனா குடும்பத்தினரும் சமந்தாவை அவரது விருப்பத்திற்கு வலியுறுத்தியதாகவும் இதன் காரணமாகதான் சமந்தா விவாகரத்து முடிவை எடுத்ததாகவும் அமைச்சர் சுரேகா பேசியிருந்தார்.

அமைச்சரின் இந்த கருத்துக்கு சமந்தா, நாகார்ஜுனா, நாக சைதன்யா மற்றும் அமலா உட்பட அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது நாகார்ஜுனா இதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.

அமைச்சர் சுரேகா தனது குடும்ப உறுப்பினர்களின் கௌரவம் மற்றும் நற்பெயரை கெடுக்கும் வகையில் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நீதிமன்றத்தில் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்குகளை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் புகாரை நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, சட்ட நடவடிக்கை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.