சமந்தா விவகாரம்: முன்னாள் மருமகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நாகார்ஜுனா

  • IndiaGlitz, [Thursday,October 03 2024]

நடிகை சமந்தா குறித்து தெலுங்கானா மாநில அமைச்சர் சுரேகா சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், அதற்கு நாகார்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநில அமைச்சர் சுரேகா, சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.டி. ராமராவ் தான் காரணம் என்றும், அவர் செய்த சில விஷயங்களால் சமந்தா மட்டுமின்றி பல நடிகைகள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் மருமகள் சமந்தாவிற்கு ஆதரவாக நடிகர் நாகார்ஜுனா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில், அமைச்சர் சுரேகாவின் கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களை, வாழ்க்கையின் எதிரிகளை விமர்சனம் செய்ய பயன்படுத்த வேண்டாம்.

தயவு செய்து மற்றவர்கள் தனிப்பட்ட உரிமையை மதித்து செயல்படுங்கள். பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள், ஒரு பெண்ணாக இருந்து கொண்டு எங்கள் குடும்பத்தின் பெண்ணுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதும், குற்றச்சாட்டுகள் வைப்பதும் பொருத்தமற்றதாக உள்ளது. மேலும், உங்கள் கருத்தை உடனே திரும்ப பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனப் பதிவு செய்துள்ளார். நாகார்ஜுனாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.