சமந்தா எங்கே? அக்கறையுடன் விசாரித்த முன்னாள் மாமனார் நாகார்ஜுனா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
’குஷி’ படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டாவிடம் சமந்தா எங்கே? என அக்கறையுடன் சமந்தாவின் முன்னாள் மாமனார் நாகார்ஜுனா விசாரித்துள்ளார்
பிக்பாஸ் தெலுங்கு தெலுங்கு நிகழ்ச்சி நேற்று ஆரம்பமான நிலையில் அதில் ’குஷி’ படத்தின் புரமோஷன் விழாவும் நடைபெற்றது. இதில் விஜய் தேவரகொண்டா உள்பட படக்குழுவினர் வருகை தந்திருந்தனர்
அப்போது குஷி பட குழுவினர்களை வரவேற்ற நாகார்ஜுனா, விஜய் தேவரகொண்டாவிடம், படத்தின் நாயகி சமந்தா எங்கே? என்று கேட்டார். அதற்கு விஜய் தேவரகொண்டா ’அவர் அமெரிக்காவில் இருந்து கொண்டு படத்தின் புரமோஷன் பணிகளை கவனித்துக் கொண்டே சிகிச்சையும் பெற்று வருகிறார் என்று கூறினார்.
’குஷி’ படத்தில் நீங்களும் சமந்தாவும் நன்றாக நடித்துள்ளீர்கள், ஒருவரை ஒருவர் போட்டி போட்டு நடித்துள்ளீர்கள் என்று நாகார்ஜுனா பாராட்டு தெரிவித்தார் . மேலும் ’உங்கள் இருவரில் நடிப்பில் யார் யாரை டாமினேட் செய்தீர்கள் என்று கேட்க ’சமந்தா தான் டாமினேட் செய்தார்’ என்று விஜய் கூறினார்.
தனது முன்னாள் மருமகள் தங்கள் குடும்பத்தில் இருந்து பிரிந்துவிட்டாலும் அவரை அக்கறையுடன் நாகார்ஜுனா விசாரித்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
Are you ready to witness the energy of sensational @TheDeverakonda?! He is going to set the Bigg Boss house on fire as a special guest!🔥
— Disney+ Hotstar Telugu (@DisneyPlusHSTel) September 3, 2023
Don't miss the blazing launch of #BiggBoss7#Starmaa #Disneyplushostartelugu #Nagarjuna pic.twitter.com/UQA3e97NMA
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com