தனுஷ் முன் நடந்த விபரீதம்.. மன்னிப்பு கேட்ட நாகார்ஜூனா.. என்ன நடந்தது?

  • IndiaGlitz, [Monday,June 24 2024]

நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகர் தனுஷ் விமான நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபரீத செயலுக்கு நாகார்ஜுனா மன்னிப்பு கேட்டு தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

நாகார்ஜுனா மற்றும் தனுஷ் இணைந்து நடிக்கும் ’குபேரா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இருவரும் ஹைதராபாத் விமான நிலையத்தில் படபிடிப்புக்காக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு முதியவர் நாகார்ஜுனா அருகில் வந்து பேச முற்பட, அங்கிருந்த பவுன்சர் அந்த முதியவரை இழுத்து கீழே தள்ளிவிட்டார். இதை நாகார்ஜுனா கவனிக்காமல் சென்று கொண்டிருந்தார், ஆனால் தனுஷ் இதை கவனித்து அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில் இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதை அடுத்து நாகார்ஜுனா தனது சமூக வலைத்தளத்தில் ’இப்போதுதான் இது என்னுடைய கவனத்திற்கு வந்தது, கண்டிப்பாக இந்த நிகழ்வு நடந்திருக்கக் கூடாது, அந்த மனிதரிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறியுள்ளார்.

முதலில் இந்த வீடியோவை பார்த்து நாகார்ஜுனாவுக்கு கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில் தற்போது அவர் ஒரு சில மணி நேரத்தில் மன்னிப்பு கேட்டதை அடுத்து இந்த விவகாரம் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.

 

More News

ஏஐ மூலம் பவதாரிணி குரல்.. 'லால் சலாம்' படத்திற்கு உதவிய அதே நிறுவனம்.. புதிய தகவல்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் நேற்று வெளியான நிலையில் இந்த பாடலில் பவதாரிணி குரல் ஏஐ டெக்னாலஜி மூலம் பயன்படுத்தப்பட்டிருந்தது

29 ஆண்டுகளுக்கு பின் முதல் பட நாயகனை சந்தித்த பிரபல நடிகை.. எமோஷனல் பதிவு..!

பிரபல பாலிவுட் நடிகை 29 ஆண்டுகளுக்கு பின் தனது முதல் பட நாயகனை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து எமோஷனல் ஆக சில விஷயங்களை தெரிவித்துள்ளார்.

இப்படி டிரஸ் போட்டு சைக்கிள் ரிக்சா ஓட்டலாமா? டிராபிக் என்ன ஆகும்? மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை மாளவிகா மோகனன் சைக்கிள் ரிக்சா முன்பு கிளாமர் உடை அணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் '

'சூர்யா 44' படத்தில் இணைந்த சிம்பு பட நடிகர்.. அந்தமான் விரைவதாக தகவல்..!

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு தற்போது அந்தமானில்ல் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சிம்பு படத்தில் நடித்த மலையாள

குக் வித் கோமாளி சீசன் 5: குக்குகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.  இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஸ்ரீகாந்த் தேவா மட்டுமே