தனுஷ் முன் நடந்த விபரீதம்.. மன்னிப்பு கேட்ட நாகார்ஜூனா.. என்ன நடந்தது?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகர் தனுஷ் விமான நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபரீத செயலுக்கு நாகார்ஜுனா மன்னிப்பு கேட்டு தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.
நாகார்ஜுனா மற்றும் தனுஷ் இணைந்து நடிக்கும் ’குபேரா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இருவரும் ஹைதராபாத் விமான நிலையத்தில் படபிடிப்புக்காக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு முதியவர் நாகார்ஜுனா அருகில் வந்து பேச முற்பட, அங்கிருந்த பவுன்சர் அந்த முதியவரை இழுத்து கீழே தள்ளிவிட்டார். இதை நாகார்ஜுனா கவனிக்காமல் சென்று கொண்டிருந்தார், ஆனால் தனுஷ் இதை கவனித்து அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதை அடுத்து நாகார்ஜுனா தனது சமூக வலைத்தளத்தில் ’இப்போதுதான் இது என்னுடைய கவனத்திற்கு வந்தது, கண்டிப்பாக இந்த நிகழ்வு நடந்திருக்கக் கூடாது, அந்த மனிதரிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறியுள்ளார்.
முதலில் இந்த வீடியோவை பார்த்து நாகார்ஜுனாவுக்கு கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில் தற்போது அவர் ஒரு சில மணி நேரத்தில் மன்னிப்பு கேட்டதை அடுத்து இந்த விவகாரம் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.
This just came to my notice … this shouldn’t have happened!!
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) June 23, 2024
I apologise to the gentleman 🙏and will take necessary precautions that it will not happen in the future !! https://t.co/d8bsIgxfI8
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com