close
Choose your channels

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர் படத்தில் இணைகிறாரா நாகார்ஜுனா? நாளை அறிவிப்பு..!

Tuesday, August 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவர் தனுஷ் என்பதும், இவர் நடித்து முடித்துள்ள ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

மேலும் தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பது மட்டுமின்றி தனுஷ் இயக்கியும் வருகிறார் என்பது தெரிந்ததே. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் விரைவில் வெளியாகும்.

இந்த நிலையில் தனுஷின் அடுத்த படமான 'D51’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்க இருக்கிறார் என்றும், இந்த படத்தை விஜய்யின் 'வாரிசு’ படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது .

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ’இஞ்சி இடுப்பழகி’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நாகார்ஜுனா நடித்திருந்த நிலையில் 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் தமிழில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment