சமந்தா திருமணத்தை உறுதி செய்த நாகார்ஜூனா?
- IndiaGlitz, [Wednesday,June 29 2016]
கோலிவுட், டோலிவுட்டின் பிரபல நடிகை சமந்தாவுக்கு விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக வெளிவந்த செய்தியை சற்று முன்னர் பார்த்தோம். இந்நிலையில் இந்த செய்தியை உறுதிப்படுத்துவதைபோல் அடுத்தடுத்து சில தகவல்கள் வெளிவந்துள்ளது.
சமந்தா காதலிப்பாக கூறப்படும் நாக சைதன்யாவின் தந்தையும் பிரபல நடிகருமான நாகார்ஜூனா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் விரைவில் ஒரு நல்ல செய்தியை அனைவருக்கும் கூற இருக்கின்றேன்' என்று கூறியுள்ளார். இது அனேகமாக நாகசைதன்யா-சமந்தாவின் திருமணம் குறித்த செய்தியாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் சிகாகோவில் வரும் ஜூலை 1 முதல் 3ஆம் தேதி வரை நடைபெறும் ATA என்று கூறப்படும் அமெரிக்க தெலுங்கு அசோசியேஷன் விழாவில் சமந்தா கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் திடீரென இந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு செய்திகளும் சமந்தாவின் திருமண நிச்சயதார்த்த தேதி நெருங்கிவிட்டதை குறிப்பதாக சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் சமந்தாவின் திருமண செய்தி அதிகாரபூர்வமாக வெளிவரும் வரை பொறுமை காப்போம்.