அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்த கலெக்டர்… இணையத்தை கலக்கும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில்கொண்டு வாரத்தின் புதன்கிழமைகள் தோறும் அரசு அதிகாரிகள் சைக்கிளில் வரவேண்டும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவுறித்தி இருந்தது. இதையடுத்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் நேற்று தனது வீட்டில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்தார்.
மேலும் உதவியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களும் கலெக்டருடன் இணைந்து சைக்கிளில் வந்தனர். இதையடுத்து கலெக்டர் அருண் தம்பு ராஜ்ஜின் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு அதிகாரிகள் அனைவரும் சைக்கிளைப் பயன்படுத்துமாறு தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது. இதையடுத்து தற்போது அருண் தம்பு ராஜ் ஐஏஎஸ் செய்த காரியம் தற்போது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதேபோல கடந்த ஆண்டுகளில் சில அரசு அதிகாரிகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிளில் பயணம் செய்துள்ளனர். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜெய்பூரில் Zakir Hyssan எனும் ஐஏஎஸ் அதிகாரி சைக்கிளில் சென்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார். மேலும் கடந்த 2018 வாக்கில் குஜராத் மாநிலத்தில் Chhota udepur மாவட்டத்தில் வேலைப்பார்த்த ஐஏஎஸ் அதிகாரி Praveen Chawdhary தினமும் தன்னுடைய அலுவலகத்திற்கு சைக்கிளில் சென்றதாகக் கூறப்படுகிறது.
இப்படி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கவும் சில உயர் அதிகாரிகள் செய்யும் இதுபோன்ற செயல் மக்களிடம் தொடர்ந்து வரவேற்பை பெறுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout