இயக்குனர் விஜய்-சாய்பல்லவி படத்தின் ஹீரோ இவர்தான்!

  • IndiaGlitz, [Monday,May 22 2017]

பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'வனமகன்' திரைப்படம் விரைவில் திரைக்கு வெளிவரவுள்ள நிலையில் விஜய் இயக்கும் அடுத்த படம் 'கரு' என்பதை ஏற்கனவே பார்த்தோம்
சூப்பர் ஹிட் ஆன மலையாள திரைப்படம் 'பிரேமம்' படத்தில் மலர் கேரக்டரில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்த சாய்பல்லவி இந்த படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஹீரோ குறித்த செய்திகள் வெளிவந்துள்ளது.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தில் பிரபல தெலுங்கு ஹீரோ நாகசெளரியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
திகில் மற்றும் சஸ்பென்ஸ் படமான இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்று தெரிகிறது.