அப்படிப்பட்ட நட்பு எனக்கு தேவையில்லை: சமந்தா குறித்த கேள்விக்கு நாக சைதன்யா காட்டமான பதில்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விவாகரத்து பெற்று பிரிந்தாலும் நட்பாக இருக்கலாம் என்று சமந்தா கூறியது குறித்து நாக சைதன்யா கூறிய போது ’அப்படிப்பட்ட நட்பு எனக்கு தேவையில்லை’ என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா ஆகிய இருவரும் சமீபத்தில் பிரிந்தனர் என்பதும் இவர்களது பிரிவு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே.
இந்நிலையில் சமந்தா அளித்த சில பேட்டிகளில் விவாகரத்து பெற்றாலும் நட்பாக தொடரலாம் என்று கூறியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து நாக சைதன்யாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘பிரிவோம் என்று முடிவு செய்து விட்டால் அதற்கு பிறகு நட்பு எதற்கு? இதுதான் என்னை மிகவும் எரிச்சல் அடைய செய்கிறது, அப்படிப்பட்ட நட்பு எனக்கு தேவையில்லை’ என்று கூறியுள்ளார்
இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’கஸ்டடி’ என்ற திரைப்படம் மே 12ஆம் தேதி உள்ளது. நாக சைதன்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கும் இந்த படத்தில் சரத்குமார், அரவிந்த சாமி, வெண்ணிலா கிஷோர், சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments