நடிகை சமந்தா திருமண தேதி! அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை சமந்தாவும் பிரபல தெலுங்கு நடிகரும் நடிகர் நாகார்ஜூனா-அமலா தம்பதியின் மகனுமான நாக சைதன்யாவுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில் இவ்வருட இறுதியில் இவர்களுடைய திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதன்படி சற்று முன்னர் சமந்தா-நாகசைதன்யா திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடைய திருமணம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமந்தா தற்போது இளையதளபதி விஜய்யுடன் 'தளபதி 61', விஷாலுடன் 'இரும்புத்திரை', அநீதிக்கதைகள் மற்றும் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின்னர் நடிப்பை தொடர்வதாக அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com