சாய்பல்லவிக்கு காதலர் தின வாழ்த்து சொன்ன விவாகரத்து பெற்ற நடிகர் .. செம்ம ரொமான்ஸ் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சாய் பல்லவிக்கு விவாகரத்து பெற்ற நடிகர் ரொமான்ஸுடன் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகரும் சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யா ஆகிய இருவரும் முதன்முதலாக ’லவ் ஸ்டோரி’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். இந்த படத்தில் அவர்கள் நடிக்கும் போது இருவருமே உண்மையான காதலர்கள் போல் இருக்கிறது என நெட்டிசன்கள் கொளுத்தி போட அதன் பின் இருவரும் காதலிப்பதாக கிசு கிசுவும் வந்தது. ஆனால் அது கிசுகிசுவாகவே மறைந்துவிட்ட நிலையில் தற்போது இந்த ஜோடி மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்
’தண்டேல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை சாய்பல்லவி தனது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் நடிகர் நாக சைதன்யா பனிபொழியும் ஒரு இடத்தில் உள்ள சாய்பல்லவியை ரொமான்ஸ் உடன் கூப்பிட்டு ’கொஞ்சம் சிரித்தால் என்ன’ என்று கேட்கும் காட்சி உள்ளது. இதைக் கேட்டு சாய் பல்லவியும் சிரிக்கிறார்.
இந்த வீடியோவின் முடிவில் காதலர் தின வாழ்த்துக்கள் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் இருவரும் உண்மையாகவே காதலிப்பது போன்ற காட்சி இருந்தாலும் இந்த காட்சிகள் படத்திற்காக தான் மட்டும் என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டுள்ளனர். எனவே இனிமேல் இருவரும் காதலிப்பதாக எந்த கிசுகிசுவும் எழ வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
Happy Valentine’s ☺️❤️ pic.twitter.com/3yoJm3uU56
— Sai Pallavi (@Sai_Pallavi92) February 14, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com